இயேசுவின் ஊழிய பயண பின்னணியில் லூக்கா 8:1-3 அமைக்கப்பட்டுள்ளது. இப்பிரிவு இயேசுவின் ஊழியத்தில் பெண்களின் அசாதாரண பங்கைப் கோடிட்டு காட்டுகின்றது. மேலும் பக்தி, தைரியம் மற்றும் சமூக விதிமுறைகளை முறியடிக்கும் துணிச்சலைப்பற்றி நமக்குத் இக்கதை சுருக்கமாக விவரிக்கிறது.
களப்பணி
இயேசு பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் பிரயாணம்பண்ணி இறை அரசின் நற்செய்தியை பிரசங்கித்து வந்தார். அவருடன் பன்னிரண்டு சீடர்களும் சேர்ந்து பயணித்திருத்தனர். மேலும் தீய ஆவிகள் மற்றும் நோய்களிலிருந்து குணமடைந்த பெண்களும் அவருடன் களப்பணியாற்றி வந்தனர்.
ஊழியத்திற்கு ஆதரவு
பெண்களில் அநேகர் இயேசுவை பின்பற்றி அவர் வழி நடந்து, அந்த வழியினை மற்றவர்களுக்கு எடுத்துறைக்கும் ஊழியப்பாதையில் இயேசுவுடன் கூட துணை நின்றனர். அவர்கள் அதற்கான செலவுகளையும் ஏற்றுக்கொண்டார்கள்.
இவர்களில் மகதலேனாள் எனப்பட்ட மரியாளையும், கூசாவின் மனைவியாகிய யோவன்னாளையும், சூசன்னாளையும், லூக்கா நமக்கு அறிமுகப்படுத்துகிறார். இவர்கள் இயேசுவினால் சுகப்படுத்தப்பட்டு அவர்கள் உள்ளங்களில் மறுமலர்ச்சியையும் வாழ்க்கையில் மாற்றத்தையும் அனுபவத்திருந்தனர். மேலும் இவர்கள் இயேசுவின் ஊழியத்தை தங்கள் ஆஸ்திகளால் ஆதரித்தனர்.
பெண்கள் இயேசுவை பின்பற்றி, பணிவிடை செய்து அவருடைய நற்செய்திப் பணியைத் தங்கள் ஆஸ்திகளால் ஆதரிப்பதாக விவரிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தலைமைத்துவ திறன்
மகதலேனாள் மரியாள், யோவன்னாள், சூசன்னாள் களப்பணியிலே சீடர்களுடன் ஒன்றாகச் சேர்ந்து இறை தொன்றாட்டினார்கள். அவர்கள் மறைவாக நின்று பனி செய்யவில்லை. மாறாக அவர்கள் களப்பணியிலே முன்னிலையில் இருந்தார்கள்.
இயேசுவை பின்பற்றிய பெண்களின் தனித்துவத்தையும் தலைமைத்துவ திரணையும் லூக்கா மிகவும் அழகாக கோடிட்டு காண்பிக்கிறார்.
ஆதிக்க ஒடுக்குமுறை எதிர்ப்பு
இயேசு வாழ்ந்தக்காலத்தில் பெண்கள் பொது இடங்களில் இருப்பது மிகக் கடினம். ஆனால் இப்பெண்கள் அர்ப்பணிப்புடன் இயேசுவுக்கு சேவை செய்தார்கள். மேலும் அவர்கள்ஆண் ஆதிக்க செயல்பாடுகளையும் சமுதாய ஒடுக்குமுறையையும் எதிர்த்து நின்று, அவற்றையெல்லாம் முறியடித்து, இறை பணியில் இயேசுவுடன் துணை நின்றார்கள்.
சமுதாய மாற்றத்துக்கான கூக்குரல்
இக்கதையை மேலோட்டமாகப் படித்தால் வெறும் பெயர் பட்டியல் கொண்ட பகுதிபோலத் தான் நமக்குப் புலப்படும். ஆனால் இக்கதை சமுதாய சீர்திருத்த சிந்தைனைகளுக்கான வித்தாக மாறக்கூடிய திறனைப் பெற்றுள்ளது.
பெண்களுக்கு நம் சமுகம் வரைந்திருக்கிற முட்டுக்கட்டைகளையும் எல்லைகளையும் தட்டி கேட்டு, சமூகம், சமத்துவம் பரஸ்பர ஆதிரவு பற்றிய பரந்த புரிதலுக்குள் நம்மை விரைவாக நகர்த்தி செல்கின்றது. மேலும் இந்தப் பகுதி, ஆன் பெண் இருவருக்கான சமம்மான சமுதாயத்தையும் பற்றியும், அந்த மாற்றத்துக்குத் தேவையான சீர்திருத்த பார்வையை நமக்கு வழங்குகிறது.
ஊழியத்தின் புரட்சி
இந்தச் சுருக்கமான பகுதி, இயேசுவின் ஊழியத்தின் புரட்சிகரமான தன்மையைப் பற்றிய ஒரு அசாதாரண பார்வையை நமக்கு வழங்குகிறது. ஒரு சில வரிகளில் நம்முடைய சமுதாயத்தைப் பற்றியும் விசுவாசத்தை பற்றியும் விமர்சனம் செய்து இவ்விரண்டையம் மாற்று சிந்தனையுடன் சிறந்த முறையில் பார்க்க உதவுகிறது. கவனமாகப் படிக்கும் பொழுதுதான் நாம் இதை உள்வாங்கிக்கொள்ள முடியும்.
சபையிலும் மற்றும் சமூகத்திலும் பெண்களுக்கு உரித்தான இடத்தை நாம் இனி எத்தனை காலம் தான் மறுக்கப் போகிறோம்? இதற்கான நம் பங்களிப்பு என்ன?
வாழ்க்கை வளம் பெறுவதற்கான ஞானச் சிந்தனைகள்
வளங்களைக் கொடுத்துதவுதல்
மகதலேனாள் மரியாள், யோவன்னாள், சூசன்னாள் மற்றும் பலர் இயேசுவின் ஊழியத்தை தங்கள் ஆஸ்திகளால் ஆதரித்தனர். நீங்கள் இறை பணியில் பங்களிக்கக்கூடிய வளங்கள் என்ன? நேரம், பணம், அல்லது திறன்கள் என எதுவாக இருந்தாலும் நீங்கள் இறைபணிக்கு சமர்ப்பிக்கலாம்
செயல்திறன் கூடிய ஆதரவு:
இக்கதையில் வரும் பெண்களைப் போல நீங்களும் உங்களுக்குப் பிடித்த சேவைகளைச் சமூகத்திற்கு செய்யலாம்மே. மேலும் நம்பிக்கையுடன் நீங்கள் உங்கள் மனம் கவர்ந்த கொள்கைகளுக்கு ஆதரவை தெரிவிக்கலாம். நீங்கள் ஒரு சமூகத்தின் அங்கம். நீங்கள் செயல்திறனுடன் இறைபணியாற்றலாம்.
முட்டுக்கட்டைகளை தகர்த்தெறிதல்
சமூகம் மற்றும் இறை பணியில் ஆண் பெண் சமத்துவத்திற்கான ஆதரவுக்குரலை நாம் ஒருங்கிணைத்து எழுப்ப வேண்டும். ஒரு மாற்றத்தை ஏற்படுத்துபவராக நாம் இருக்க வேண்டும்.
சமூகத்துடன் ஒன்றிணைதல் :
பெண்கள் சீடர்களுடன் சேர்ந்துதான் இறைப் பணியாற்றினார்கள். சீடர்களும் அவர்களை ஏற்றுக்கொண்டார்கள். சீடர்களின் சமூகத்தின் ஒரு அங்கமாகத்தான் இப்பெண்கள் செயல்பட்டார்கள்.
சமூகத்துடன் ஒன்றிணைந்து நீங்கள் செயல்பட்டால் தடைகளை உடைக்கும்பொழுது நீங்கள் தனிமைப்படுத்தப்படமாடீர்கள். நாம் ஒருங்கிணைத்துச் செயல்பட்டால்தான் செழுமையும், அதிகாரமும் பெறுகும்.
கலந்துரையாடலுக்கான கேள்விகள்
- இந்தப்பகுதியில் உள்ள கதாப்பாத்திரங்களில் எந்தக் கதாபாத்திரத்துடன் நீங்கள் அதிகம் அடையாளம் காண்கிறீர்கள், ஏன்?
- லூக்கா 8: 1 – 3 பகுதியிலுருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்? உங்கள் சபையில் மற்றும் சமூகத்திலும் உள்ள செயல்பாடுகளிலிருந்து இது எவ்வாறு மாறுபட்டிருக்கிறது ?
- இந்தப் பெண்களின் பங்களிப்பு எவ்வாறு உங்கள் இறைப்பணி மற்றும் சீடர்த்துவம் பற்றிய கருத்துக்களை சவால் அல்லது உறுதிப்படுத்துகிறது?
- ஏரோதின் காரியக்காரனான கூசாவின் மனைவியாகிய யோவன்னாள், இயேசுவுடன்கூட இறைபணியாற்றினார்கள். யோவன்னாள் செய்ததைப் போலவே, உங்கள் சொந்த செல்வாக்கை நீங்கள் எப்படிப் பயன்படுத்தலாம்?
- இந்த வேதாகம பகுதியில் பன்முகத்தன்மையை காண முடிகிறது. நம்முடைய சபைகளில் மற்றும் சமூகங்களில் இதே வகையான பன்முகத்தன்மையை நாம் ஏற்றுக்கொள்ள முடியுமா? ஏன்?