இயேசுவின் சீடர்கள் அவரை பின்தொடர்ந்தனர். அவரைப் நெருக்கமாக பின்பற்றினார்கள். இயேசு தம் வாழ்க்கை முறையையினை அவர்களோடு பகிந்துக்கொண்டார். சீடர்கள் பக்தியிலும் , பிரார்த்தனையிலும் மற்றும் தெய்வ நம்பிக்கையில் வெகுவாக வளர்ந்து வந்தனர்.
ஆனால் லூக்கா 8:22-25 இயேசுவின் சீடர்கள் வாழ்க்கையில் நிகழும் ஒரு தடுமாற்றத்தை நமக்கு முன்வைக்கிறது. இது சுவாரிசாசுவம் வாய்ந்தது. வாழ்க்கை “புயலில்” நாம் சிக்கி தவிக்கும் தருணங்களை ஒரு உருவகமாக இதுவிளங்குகிறது. நம்பிக்கை பற்றிய புரிதலுக்கு இது சவால் விடுகின்றது.
நம்பிக்கையில் தடுமாற்றம்
நாம் அக்கரைக்கு செல்ல வேண்டும்”, என்று இயேசு தம் சீடர்களிடம் கூறினார்.
ஏரியைக் கடந்து செல்ல இயேசுவும் அவருடைய சீடர்களும் படகில் ஏறினார்கள்
அவர்களுடையப் படகோட்டம் சுமுகமாக இருந்தது. பயணம் சுகமாகவும் இருந்தது.
இயேசு அப்படியே தூங்கிவிட்டார்.
சீடர்கள் இதை பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை.
அமைதியாக இருந்த ஏரி இப்போழுது ஒரு பயங்கர புயலினால் கொந்தளிப்பாக மாறுகிறது
பேரலைகள் படகின்மேல் மோதியது.
படகிற்குள் தண்ணீர் வந்தது,
படகு கவிழும் நிலையில் இருந்தது.
இப்பெரும்புயலின் சீற்றத்தால் படகில் பீதி அதிகரித்தது.
“ஐயோ நாம் மூழ்கிவிடப் போகிறோம்!” என்று பதட்டத்துடன் சீடர்கள் இயேசுவை எழுப்பினார்கள்.
ஆரம்பத்தில் இருக்கும் ஒரு அமைதியான உணர்வு விரைவாக பயமாகவும் விரக்தியாகவும் மாறுகிறது
சீடர்கள் இயேசுவின் மேல் நம்பிக்கை வைத்திருந்தது உண்மைதான். ஆனால் ஒரு சிறிய கணப்பொழுதில் அவர்களின் நம்பிக்கையில் தடுமாற்றம் ஏற்பட்டது. சீடர்கள் பயம் மற்றும் அவநம்பிக்கை போன்ற மனித எதிர்வினைகளை வெளிப்படுத்துகிறார்கள்.
நம்மில் பலர் இந்தச் சூழ்நிலையில் எழும் சந்தேகம், பயம், மற்றும் விரக்தியுடன் சுலபமாக தொடர்பு படுத்திக்கொள்ளலாம். இந்த கதை நம் ஒவ்வொருவரையும் ஆழமாகத் தொடுகிறது இல்லையா?
இயேசு நம்முடனே
காற்றின் சீற்றம், கடலின் இரைச்சல், சீடர்களின் கூப்பாட்டிற்கு மத்தியில் இயேசு விழித்தெழுந்தார். இது ஒரு இக்கட்டான நெருக்கடிதான். ஆனால் புயலின் சீற்றத்தை பார்த்து அவர் கவலைப்படவில்லை. சிறிதும் கலங்கவில்லை. இயேசு அமைதியாகவே இருந்தார்.
உடனடியாக காற்றையும் நீரின் கொந்தளிப்பையும் கடிந்துகொண்டார். உடனே பெருங்காற்றும் பேரலைகளும் ஓய்ந்தனஅமைதி உண்டாயிற்று.
அவர் அவர்களிடம், “உங்கள் நம்பிக்கை எங்கே?” என்றார்.
வாழ்க்கையின் சவால்களை சந்திக்கும் போது நாம் ஏன் நம்முடைய நம்பிக்கையை இழக்கிறோம் என்று தெரியுமா? இயேசுவின் இந்த கேள்வியால் திடீரென்று இந்த கதை நம்பிக்கை பற்றிய கதையாக மாறுகிறது. நம்பிக்கை பற்றிய நம்முடைய புரிதலுக்கு இது சவால் விடுகின்றது.
நம்பிக்கையை தவறவிடுவது ஏற்புடையதா?
இந்த கதையின் மையத்தில் இருக்கும் கேள்விகள் என்ன தெரியுமா? இயேசுவின்மேல் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம் என்று சொன்னால் அதன் பொருள் என்ன? இந்த நம்பிக்கையை தற்காலிகமாக இழக்க முடியுமா? இந்த நம்பிக்கையை தவறவிடுவது ஏற்புடையதா?
நெருக்கடியான நேரங்களில் சந்தேகத்தினாலும் பயத்தினாலும் நம் நம்பிக்கையில் தடுமாற்றம் ஏற்படுவது மனித இயலப்புத்தான். ஒரு சிலர் அந்நேரங்களில் நம்பிக்கையை முழுவதுமாக தொலைத்து விடுவதும் உண்டு.
இயேசு நம்மோடு இருக்கையில் நாம் ஏன் பயப்படவேண்டும்? நாம் ஏன் நம்முடைய நம்பிக்கையை இழக்க வேண்டும்?
அவர் யார் என்பது தெரியுமா?
புயல்கலின் சீரத்திற்க்கு நடுவே கடவுளின் கிருபையும் பாதுகாப்பும் நமக்கு உண்டு.
நாம் கடவுளின் கண்காணிப்பு வளையத்திற்குள் தான் இருக்கிறோம். அவர் பிரசன்னம் நம்மை சூழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்நிகழ்வு காற்றையும் கடலையும் கட்டளையிடும் இவர் யார்? என்கிறன்ற சிந்தனைக்குள் சீடர்களை நகர்த்தி செல்லுகிறது. அவர் யார்? என்பதை நமக்கு நன்றாக விழக்குகிறது.
இயேசு ஒரு போதகர் மட்டுமல்ல அதைவிட மேலானவர். சீடர்களின் பிரமிப்பும் ஆச்சரியமும் இயேசு ஆளுமையை நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
இயேசுவை பின்பற்றும் நமக்கு அவர் யார் என்பது தெரியுமா? அவர் யார் என்பதை முழுமையாக அறிந்திருக்கின்றோமா? அதை அங்கீகரித்து செயல்படுகிறோமா? அல்லது இதை எளிதாக மறந்து விடுகிறோமா?
நடைமுறைப் பாடங்கள்
நாம் கடினமான காலங்களில் செல்லும்போது, இயேசுவின் மீதான நம்பிக்கையை இழக்க நேரிடும். தடம் புரண்ட நம்பிக்கையை நாம் மீண்டும் சரிசெய்துவிட முடியுமா? அதை மறுபடியும் மீட்டெடுக்கும் வழி தான் என்ன?
இந்தக் கதையில் பல நடைமுறைப் பாடங்கள் உள்ளன
- உணர்ச்சிகளின் ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ, அல்லது ஆன்மீக ரீதியாகவோ நாம் ‘புயல்களை’எதிர்கொள்ளும்போது இயேசுவின் மீது நம்பிக்கை வைப்பதற்கான நினைவூட்டலாக இந்தக் கதை செயல்படுகிறது.
- நமது அச்சங்களையும் மற்றும் குறைகளையும் ஏற்றுக்கொள்வது அவசியம். பலவீனமான தருணங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால் இந்த “புயல்” அனுபவங்கள் மூலம் நாம் நம்பிக்கையில் வளர முடியும்.
- தெய்வீக தலையீடு நம் வாழ்வில் சாத்தியம் தான். அது நடைமுறைக்கு அப்பாற்பட்டது அல்ல என்பதை கதை மீண்டும் வலியுறுத்துகிறது.
உங்கள் நம்பிக்கை எங்கே?
இந்தக் கதை எந்தக் காலத்துக்கும் இடத்துக்கும் பொருந்தும். வாழ்க்கை “புயலில்” நாம் சிக்கி தவிக்கும் தருணங்களை ஒரு உருவகமாக இது விழங்குகின்றது.
வாழ்க்கையின் சவால்களை சந்திக்கும் போது நாம் ஏன் நம்முடைய நம்பிக்கையை இழக்கிறோம்?
கடவுள் நம் அருகில் இருக்கிறார். இதை நாம் அறிந்திருக்கிறோமா? அவர் எப்போதும் நம்முடன் இருப்பதால் பாதுகாப்பை நாம் உணர முடியும்.
காற்றையும் கடலையும் கட்டுப்படுத்தக்கூடியவர் அவர். ஆபத்தின் விளிம்பில் இயேசு நமக்கு உதவுவார் மற்றும் நம் வாழ்க்கையில் அமைதியைக் கொண்டுவருவார் என்பதை என்றும் மறக்காதீர்கள்.